இந்தியா

முப்படைகளும் தயார் நிலையல் இருக்க வேண்டும்.. ராஜ்நாத் சிங் அதிரடி.. போர் ஏற்படுமா?

Published

on

இந்திய – சீனா எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், முப்படைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும், என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.

இந்திய எல்லையில் சீனா அத்துமீறியதால் 20 இராணுவ வீரர்கள் இறந்தனர். அதனை தொடர்ந்து கல்வான் பல்லத்தாக்கில் ஏற்பட்ட மோதல், தொடர்ந்து நடைபெற்று வரும் அத்துமீறல்கள் குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதன் முடிவில் எல்லையில் பாதுகாப்புகளை அதிகரிக்குமாறும் முப்படைகளும் தயார் நிலையல் இருக்க வேண்டும் என்று ராஜ்நாத் கூறியுள்ளார்.

அதனை அடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் ராஜ்நாத் சிங், எல்லையில் சீன இராணுவத்தின் தாக்குதலால் இரந்த வீர மரணம் அடைந்தவர்களின் தியாகத்தையும், துணிச்சலையும் நாடு மறக்காது.

வீர மரணம் அடைந்த குடும்பத்தினருக்கு நாட்டு மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். இறந்தவர்களின் வீரம் மற்றும் துணிச்சலைக் கண்டு பெருமைபடுவதாகவும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.

மறுபக்கம் சீனாவும் இந்திய எல்லை பகுதிகளில் தங்களது இராணுவத்தை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version