இந்தியா

வகுப்பறையில் திடீரென உயிரிழந்த 8ஆம் வகுப்பு மாணவி.. அதிர்ச்சி காரணம்!

Published

on

ராஜ் கோட்டில் 8ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த 13 வயது மாணவி திடீரென மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராஜ்கோட்டில் உள்ள ஸ்ரீ அம்ரித்லால் விர்சந்த் ஜசானி வித்யாமந்திர் என்ற பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ரியோ சோனி என்பவர் வழக்கம் போல் பள்ளிக்கு வந்திருந்த நிலையில் திடீரென அவர் வகுப்பறையில் மயக்கம் அடைந்தார். இதனை அடுத்து அவரை மயக்கம் தெளிவதற்காக பள்ளி ஆசிரியர் மற்றும் சக மாணவ மாணவிகள் முயற்சித்த போதும் பலனில்லை என்பதால் உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் மருத்துவமனையில் ரியா சோனிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த போது திடீரென அவர் காலமானார். இந்த செய்தியை அறிந்த ரியாவின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்ததோடு பள்ளி மீது குற்றம் சாட்டி உள்ளனர்.

முதல் கட்ட தகவலின் படி மாணவி ரியா சோனி குளிரை தாங்க முடியாமல் தான் மரணமடைந்தார் என்றும் பள்ளி பரிந்துரைத்த குளிர்கால உடைகள் குளிரை தாங்கும் அளவிற்கு போதுமானதாக இல்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால் மாணவி மரணம் குறித்து மருத்துவர்கள் கூறிய போது மாணவிக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் காலமானார் என்றும், அவரது ரத்த மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் சோதனை முடிவுக்கு பின்னரே அவரது மரணத்தின் உண்மையான காரணத்தை உறுதியாக கூற முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மறைந்த மாணவியின் பெற்றோர் கூறிய போது பள்ளி நேரத்தை காலை 7:30 மணிக்கு தொடங்கி இருந்ததால் தான் குளிர் தாங்காமல் அவர் இறந்ததாகவும் 8.30 மணிக்கு மேல் பள்ளிகள் திறக்க திறக்கப்பட்டிருந்தால் தங்களது மகள் உயிரிழந்திருக்க மாட்டார் என்றும் அது மட்டுமின்றி குழந்தைகளை பாதுகாக்க பள்ளி நிர்வாகம் பரிந்துரைந்த ஸ்வட்டர்கள் போதுமானது இல்லை என்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version