சினிமா செய்திகள்

பாலிவுட் கபூர் குடும்பத்தில் அடுத்த இழப்பு… காலமானார் நடிகர் ராஜிவ் கபூர்..!

Published

on

பாலிவுட் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்டவரும் நடிகர் ராஜ் கபூரின் இளைய மகனுமான ராஜிவ் கபூர் தனது 58-வது வயதில் காலமானார்.

திடீரென ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக ராஜிவ் கபூர் காலமானார். கபூர் குடும்பத்தில் கடந்த 2020 ஏப்ரலில் தான் ரிஷி கபூர் மறைந்தார். ஒரு வருடத்துக்குள்ளாகவே அவரது தம்பி ராஜிவ் கபூர் இன்று மறைந்ததுள்ளது கபூர் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மாரடைப்பின் காரணமாக மயங்கியவரே அவரது அண்ணனும் கரினா- கரிஷ்மாவின் தந்தையுமான ரந்தீர் கபூர் மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுள்ளார்.

ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவமனையில் தெரிவித்துள்ளனர். ராஜிவ் கபூரின் மறைவுக்கு ஒட்டுமொத்த பாலிவுட் உலகமும் இரங்கல் தெரிவித்து வருகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version