இந்தியா

இது மோடி அரசின் ஜீரோ பட்ஜெட்… ராகுல் காந்தி விளாசல்….

Published

on

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று 2022 – 2023 ஆம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஆனால், ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள் என யாருக்கும் எந்த பலனும் இல்லாத வகையில் ஒரு பட்ஜெட்டை அவர் வெளியிட்டதாக எதிர்கட்சிகள் முதல் நெட்டிசன்கள் வரை எல்லோரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த பட்ஜெட் குறித்து மம்தா பானர்ஜி உள்பட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் ஜீரோ பட்ஜெட் என்றும் பெரு நிறுவனங்களுக்கு மட்டும் சாதகமான பட்ஜெட் என்றும் ஏழை எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் வரி கட்டுபவர்களுக்கு பாதகமான பட்ஜெட் என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

twit

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ‘இது மோடி அரசின் ஜீரோ பட்ஜெட். சம்பளம் வாங்குபவர்களுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும், ஏழைகளுக்கும், இளைஞர்களுக்கும், விவசாயிகளுக்கும் ஒன்றும் இல்லை’ என பதிவிட்டுள்ளார்.

 

Trending

Exit mobile version