சினிமா

ஜனவரியில் ரஜினியின் அடுத்தப் படம் தொடக்கம்!

Published

on

ரஜினி பேட்ட படத்தைக் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பேட்ட படத்தில் ரஜினியுடன் த்ரிஷா, சிம்ரன், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில், இறுதிக்கட்ட பணிகள் நடக்கிறது.

ரஜினியின் 2.0 படம் நவம்பர் 29-ம் தேதி திரைக்கு வரும் நிலையில், அதையடுத்து பேட்ட வெளியாக உள்ளது. இதற்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது.

அரசியல் கதையில் உருவாகும் படம் குறித்து ரஜினியும், முருகதாசும் ஏற்கனவே பேசி உள்ளனர். இந்நிலையில், 2019 ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

Trending

Exit mobile version