சினிமா

ரஜினியின் மகளுக்கு 2வது திருமணம்!

Published

on

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் கோச்சடையான், வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய படங்களை இயக்கினார்.

இவர் தொழிலதிபர் வணங்காடியின் மகன் விசாகனுக்கும், வரும் ஜனவரியில் இரண்டாவது திருமணம் நடைபெறவுள்ளது. இவர்களுக்குத் தேவ் என்ற மகன் உள்ளார். இதனிடையே சௌந்தர்யா- அஷ்வின் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதால் கடந்த வருடம் விவாகரத்து செய்தனர்.

தன் மகனுடன், சென்னை, போயஸ் தோட்டம் வீட்டில், பெற்றோருடன் சவுந்தர்யா வசித்து வருகிறார். திரைப்படத் தயாரிப்பு, இயக்கம் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

கோவையைச் சேர்ந்த, தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., -எஸ்.எஸ்.பொன்முடியின் சகோதர்ரும், பிரபல தொழிலதிபருமான வணங்காமுடியின் மகன் விசாகன். இவரும், ஏற்கனவே திருமணமாகி விவகாரத்து பெற்றவர்.

இதைத் தொடர்ந்து தற்போது சௌந்தர்யா இரண்டாவதாகத் திருமணம் செய்து கொள்ள உள்ள மாப்பிள்ளையின் பெயர் ‘விசாகன்’ என்றும் அவரைப் பற்றிய சில தகவல் வெளியாகியுள்ளது. இவர் வஞ்சகர் உலகம் படத்தில் செகண்ட் நாயகனாக நடித்த நடித்தவர் ஆவார். ‘விசாகன்’ வெளிநாட்டில் எம்.பி.ஏ படிப்பை முடித்து விட்டுத் தற்போது தந்தை தொழிலை கவனித்து வருகிறாராம். மேலும் இவருடைய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version