சினிமா செய்திகள்

2020 வரை ரஜினியின் கால்ஷீட் பிஸி!

Published

on

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வரும் நடிகர் ரஜினிகாந்த், 2020வரை மேலும் 3 படங்களில் நடிக்க கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காலா, 2.0, பேட்ட என தொடர்ந்து மூன்று ரஜினி படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வெற்றி பெற்றுள்ள நிலையில், தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் மிரட்டல் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் நடித்து வருகிறார். மீண்டுமொரு அலெக்ஸ் பாண்டியனை விரைவில் எதிர்பார்க்கலாம்.

இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சந்திரமுகி படத்திற்கு பிறகு நயன்தாரா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

இதற்கு அடுத்தபடியாக கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் ரஜினி கமீட் ஆகியுள்ளதாகவும், அதற்கு அடுத்து எச்.வினோத் இயக்கத்தில் ஒரு படமும் மேலும் பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மற்றுமொரு படத்திலும் ரஜினி நடிக்க உள்ளாராம்.

அதாவது வரும் 2020வரை சூப்பர்ஸ்டாரின் கால்ஷீட் முழுவதும் நிரம்பி பிஸியாக உள்ளாராம்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version