சினிமா செய்திகள்

பேட்ட படத்தின் பாடல் வெளியீடு எப்போது.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு..!

Published

on

ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், சசிகுமார், திரிஷா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிச்சர்ஸ் தயாரித்து வரும் பேட்ட திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் இடையில் பெறும் வரவேற்பினை பெற்றுள்ள நிலையில் பாடல் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பேட்ட படத்தின் முதல் பாடல் டிசம்பர் 3-ம் தேதியும், இரண்டாது பாடல்டிசம்பர் 7ம் தேதியும், அனைத்து பாடல்களும் டிசம்பர் 9-ம் தேதியும் வெளியாக உள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்து வந்த 2.0 திரைப்படம் நவம்பர் 29-ம் தேதி வெளியாக உள்ள நிலையில் பேட்ட படத்தின் பாடல் வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் பெறும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பேட்ட திரைப்படம் 2019 பொங்கலுக்கு திரைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version