இந்தியா
டெல்லி மாணவர்கள் மீது தாக்குதல்; கருத்து தெரிவிக்க மறுத்த ரஜினி!
![Delhi Issue and Rajinikanth - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/12/Delhi-Issue-and-Rajinikanth.jpg)
டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் குடியுரிமை சட்டத்திருத்தம் குறித்து கருத்து தெரிவிக்க ரஜினிகாந்த் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ள படம் தர்பார். இந்த திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடைபெற்றது.
இந்த விழாவில் பங்கேற்ற பத்திரிக்கையாளர்கள், டெல்லி மாணவர்கள் மீதான தாக்குதல் மற்றும் குடியுரிமை சட்டத்திருத்தம் குறித்து அவரது கருத்தைக் கூறுமாறு கேட்டனர்.
அதற்கு ரஜினிகாந்த், அந்த கேள்விக்குப் பதில் அளிக்கும் நேரம் இதுவல்ல என்று மறுத்துள்ளார்.