சினிமா செய்திகள்

அமெரிக்காவில் ரசிகர்களுடன் ரஜினிகாந்த்: வைரல் புகைப்படங்கள்!

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் பரிசோதனை செய்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றார் என்பது தெரிந்ததே. அவர் சென்ற சிறப்பு விமானத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது என்பதும் அமெரிக்க அரசும் அவருக்கு அனுமதி அளித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ரஜினிகாந்த் தனது மகளுடன் மயோ என்ற மருத்துவமனையில் முன் நடந்து வந்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதனை அடுத்து தற்போது அவர் அமெரிக்காவில் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை எடுத்துக் கொண்ட கல்யாண சுந்தரம் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதனை அடுத்து பதிவு செய்துள்ளார். மேலும் அதிர்ஷ்டவசமாக நாங்கள் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்தோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் ரஜினிகாந்த் உடல் பரிசோதனைக்கு சென்ற நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் அங்கு அவர் தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்து அதன் பிறகு சென்னை திரும்புவார் என்றும், சென்னை திரும்பியவுடன் ரஜினிகாந்த் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version