இந்தியா

மோடிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து: நீங்கள் சாதித்து வீட்டீர்கள்!

Published

on

7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பாஜக தலைமையிலான கூட்டணி 350 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

மொத்தம் தேர்தல் நடைபெற்ற 542 தொகுதிகளில் பாஜக தலைமையிலான கூட்டணி 350 இடங்களில் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. ஆட்சி அமைக்க 272 இடங்களில் வெற்றி பெற்றாலே போதுமானது ஆனால் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் இந்த எண்ணிக்கையை தாண்டி முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 90 இடங்களிலும் மற்ற கட்சிகள் 102 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இதனால் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் அதாவது கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லாமல் கூட ஆட்சி அமைக்க கூடிய நிலையில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து பிரதமர் மோடிக்கு பிரபல நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், மதிப்பிற்குறிய நரேந்திர மோடி அவர்களே இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். நீங்கள் சாதித்துவிட்டீர்கள். கடவுள் ஆசீர்வதிக்கட்டும் என பதிவிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்துக்கும் பிரதமர் மோடிக்கும் நெருங்கிய நட்பு உள்ளது. மோடியின் செயல்பாடுகளை பலமுறை ரஜினி பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version