சினிமா செய்திகள்

லவ் டுடே பிரதீப் ரங்கநாதனைக் கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்!

Published

on

லவ் டுடே இயக்குநர் பிரதீப் ரங்கநாதனைக் கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

தமிழில் இந்த ஆண்டு பொன்னியின் செல்வன், விக்ரம் என படங்கள் அசூர வசூல் செய்து வந்த நிலையில் சிறிய பட்ஜெட்டில் உருவான லவ் டுடே படம் மிகப் பெரிய வசூல் சாதனையைப் படைத்து வருகிறது.

லவ் டுடே திரைப்படம் இதுவரையில் தமிழ்நாட்டில் மட்டும் 30 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக டிரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றன.

கோமாளி திரைப்படத்தைத் தொடர்ந்து அந்த படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் தானே நடித்து, இயக்கிய படம் லவ் டுடே. இன்றை இளைஞர்கள் கையில் உள்ள ஸ்மார்ட்போனால் ஏற்படும் பிரச்சனைகளை நகைச்சுவையாகப் பேசி ரசிக்க வைக்கும் படமாக லவ் டுடே இருந்த நிலையில் மிகப் பெரிய வரவேற்பைத் திரை ரசிகர்கள் வழங்கி வருகிறார்கள்.

பிரதீப் ரங்கநாதனின் இந்த வெற்றிக்கு பல்வேறு நபர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அவரை கட்டி தழுவி, ஸ்டைலாக தனக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும், இதை தனது வாழ்வில் மறக்க முடியாது என்றும் பிரதீப் ரங்கநாதன் தனது டிவிட்டர் பதிவில் புகைப்படத்தைப் பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version