தமிழ்நாடு

மீண்டும் ஆட்சிக்கு வருவதை மறந்துவிடுங்கள்.. அதிமுக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த ரஜினி!

Published

on

தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு ரஜினிகாந்த் எதிர்ப்பு தெரிவித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் செய்த பதிவில், “இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவு கூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் மே 14-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் அதற்கு எதிர்க்கட்சிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்க்கட்சியான திமுக போராட்டங்கள் மூலம் தங்களது எதிர்ப்பை தெரிவித்தது.

ஆனால், அரசியலில் முதல் படி வைத்துள்ள நடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ஆன்லைன் மற்றும் டோர் டெலிவரி சேவை மூலம் மட்டுமே மதுபானக் கடைகளைத் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இது மக்கள் நீதி மய்யத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்று கூறப்பட்டு வந்தது.

இதை அடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக்ல் கடைகளைடும் தமிழக அரசு நேற்று முதல் மூடியது. மறுபக்கம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டுக்கு சென்றது.

இப்படி எல்லா பிரச்னைகளும் முடிந்த நிலையில். ரஜினிகாந்த் மிகவும் தாமதாகம் டாஸ்மாக் திறக்கப்பட்டு 5 நாட்கள் ஆன பிறகு டிவிட்டரில் பதிவு செய்து இருப்பது விமர்சிக்கப்பட்டு வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version