சினிமா செய்திகள்

நெல்சனை முழுமையாக நம்பிய ரஜினிகாந்த்: கன்பர்ம் ஆனது ‘தலைவர் 169’

Published

on

பீஸ்ட் படத்தின் தோல்வியால் தலைவர் 169 படத்தை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு கிடைக்குமா என்ற சந்தேகம் இருந்த நிலையில் தான் முழுமையாக நெல்சனை நம்புவதாகவும் அவரிடம் இந்த படத்தை ஒப்படைக்க ரஜினிகாந்த் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் செய்திகள் கசிந்துள்ளது .

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகயிருக்கும் ’தலைவர் 16’9 திரைப்படத்தை நெல்சன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் திடீரென பீஸ்ட் படத்தின் தோல்வி காரணமாக இந்த படம் உருவாகுமா என்று சந்தேகம் ஏற்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் ரஜினிகாந்த் நெல்சனை சந்தித்ததாகவும் அப்போது பீஸ்ட் படத்தில் விஜய்யின் தலையீடு அதிகமாக இருப்பதால்தான் படம் தான் நினைத்தபடி எடுக்க முடியவில்லை என்றும் கூறியதாக தெரிகிறது .

இதனை அடுத்து நெல்சனை முழுமையாக நம்பிய ரஜினிகாந்த் அவரிடம் தலைவர் 169 பட்அத்தை ஒப்படைக்க சம்மதம் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version