சினிமா செய்திகள்

ரஜினிமுருகனில் அறிமுகமாகி ரஜினிக்கே ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்!

Published

on

பேட்ட படத்திற்கு பிறகு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் தான் ரஜினிக்கு ஜோடி என்ற புதிய தகவலும் கிடைத்துள்ளது.
ரஜினியின் 2.0 படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது. பேட்ட படம் ரிலீசுக்கு முன்னமே 125 கோடி ரூபாய்க்கு பிசினஸ் ஆகியுள்ளதாக படக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில்,  2.0 படத்தை தொடர்ந்து மீண்டும் லைகா புரடக்ஷனில் ரஜினி நடிக்கவுள்ளார். சர்கார் படத்தை தொடர்ந்து இந்த படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த படத்திற்கு நாற்காலி என்ற தலைப்பும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரஜினிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
சூர்யா, விக்ரம், விஜய் என முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து விட்ட கீர்த்தி சுரேஷ் அடுத்து சூப்பர்ஸ்டாருடன் நடிக்கவுள்ளதால், பெருமகிழ்ச்சியில் உள்ளாராம்.
seithichurul

Trending

Exit mobile version