சினிமா செய்திகள்

அண்ணாத்த தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்!

Published

on

அண்ணாத்த படத்தைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

2021-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு ரஜினிகாந்த் கட்சி ஒன்றைத் தொடங்கி, தீவிர அரசியலில் செயல்படுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அரசியல் கட்சி தொடங்கினாலும், ஆட்சியில் தனக்கு எந்த பதவியும் வேண்டாம் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். எனவே ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் தொடர்ந்து படத்தில் நடிப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அதை உறுதி செய்யும் படி, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கி வரும் ரஜினிகாந்த்தின் அண்ணாத்த படத்தைத் தொடர்ந்து, மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

புதிய படம் குறித்த அறிவிப்புகள் ரஜினிகாந்த் அண்ணாத்த ஷூட்டிங்கில் மீண்டும் கலந்துகொள்ளும் போது வெளியாகும். அதற்கு முன்பு யார் இயக்குநர், உடன் நடிக்கப் போகும் பிற நடிகர்கள் யார் என்ற விவரங்களை தெரிந்துகொள்ளச் செய்தி சுருள் இணையதளத்தைத் தொடர்ந்து படிங்க.

seithichurul

Trending

Exit mobile version