சினிமா செய்திகள்

தாதா சாகேப் பால்கே விருது: பேருந்து டிரைவர் முதல் ரசிகர்கள் வரை நன்றி கூறிய ரஜினிகாந்த்

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு மத்திய அரசு இன்று தாதா சாகேப் பால்கே விருதை அறிவித்துள்ள நிலையில் இந்த விருது குறித்து தனக்கு கிடைத்ததற்கு நன்றி கூறி ரஜினிகாந்த் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தன்னுடன் பணிபுரிந்த பேருந்து ஓட்டுனர் முதல் ரசிகர்கள் வரை அந்த அறிக்கையில் அவர் நன்றி கூறியுள்ளார். ரஜினிகாந்த் அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியத்‌ திரையுலகின் மிக உயரிய தாதா சாஹேப்‌ பால்கே விருது எனக்கு வழங்கியதற்கும்‌ , மதிப்பிற்குரிய பாரத பிரதமர்‌ திரு நரேந்திர மோடி ஜி அவர்களுக்கும்‌ என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. என்னில்‌ இருந்த நடிப்புத்‌ திறமையை கண்டுபிடித்து என்னை ஊக்குவித்த என்னுடைய பேருந்து ஒட்டுனரான நண்பன்‌ ராஜ்‌ பகதூருக்கும்‌ , வறுமையில்‌ வாடும்‌ போதும்‌ என்னை நடிகனாக்க பல தியாகங்கள்‌ செய்த என்‌ அண்ணன்‌ திரு சத்யநாராயணா கெய்க்வாட்‌ அவர்களுக்கும்‌, என்னை திரையில் அறிமுகம்‌ செய்து. இந்த ரஜினிகாந்தை உருவாக்கிய எனது குருநாதர்‌ திரு பாலச்சந்தர்‌ அவர்களுக்கும்‌, திரையுலக. தயாரிப்பாளர்கள்‌, இயக்குனர்கள்‌ தொழில்நுட்ப கலைஞர்கள், விநியோகஸ்தர்கள், திரை அரங்க உரிமையாளர்கள்‌, ஊடகங்கள்‌, மற்றும்‌ என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ்‌ மக்களுக்கும்‌, உலகெங்கிலும்‌ உள்ள எனது ரசிக பெருமக்களுக்கும்‌ இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன்‌.

Tamilnadu has a huge political vaccum says Rajinikanthஎன்னை மனமார்ந்து வாழ்த்திய மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர்‌ திரு எடப்பப்படி பழனிச்சாமி அவர்களுக்கும்‌, மதப்பிற்குரிய துணை முதலமைச்சர்‌ திரு. ஓ. பன்னீர்‌ செல்வம்‌ அவர்களுக்கும்‌, மதப்பிற்குரிய எதிர்‌க்கட்சி தலைவர்‌ நண்பர்‌ திரு. மு. ௧. ஸ்டாலின்‌ அவர்களுக்கும், நண்பர்‌ கமல்‌ ஹாசன்‌ அவர்களுக்கும்‌, மத்திய மாநில அரசியல்‌ தலைவர்களுக்கும்‌, நண்பர்களுக்கும்‌ திரையுலக நண்பர்களுக்கும்‌ என்னுடைய நலம்‌ விரும்பிகளுக்கும்‌ என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்‌.

வாழ்க தமிழ்‌ மக்கள்‌! வளர்க தமிழ்‌ நாடு! ஜெய்ஹிந்த்‌!

Trending

Exit mobile version