சினிமா செய்திகள்

ரஜினியின் நன்றி அறிவிப்பில் முதல்வர் ஸ்டாலின் பெயர் மிஸ்ஸிங்!

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று தனது 71வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு திரையுலக மற்றும் அரசியல் நண்பர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன்னர் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி கூறி அறிக்கை ஒன்றை ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: எனது பிறந்தநாளன்று என்னை அன்புடன் வாழ்த்திய மத்திய அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கும், திரு ராஜ்நாத் சிங், திரு நிதின் கட்கா, பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா, பல மாநில ஆளுநர்களுக்கும், திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், திரு ஓ பன்னீர்செல்வம், திரு ஜிகே வாசன், திரு திருநாவுக்கரசர், திரு டிகே ரங்கராஜன், திரு பொன் ராதாகிருஷ்ணன், திரு அண்ணாமலை, திரு அன்புமணி ராமதாஸ், திரு திருமாவளவன், திரு சீமான், திரு தினகரன், திருமதி சசிகலா, அவர்களுக்கும், மற்றும் பல மத்திய மாநில அரசியல் நண்பர்களுக்கும் திரு கமல்ஹாசன், திரு இளையராஜா, திரு பாரதிராஜா, திரு வைரமுத்து, திரு அமிதாப்பச்சன், திரு ஷாருக்கான், திரு வெங்கடேஷ் ஐயர் மற்றும் பல பிரபலங்களும் திரையுலகை சார்ந்த அனைத்து நண்பர்களுக்கும் ஊடக பத்திரிகை நண்பர்களுக்கும் என் நலனுக்காக கோவில்களில் பூஜைகளும் ஹோமங்களும் அன்னதானம் நடத்தி பிரார்த்தனை செய்த என்னை வாழ வைக்கும் தெய்வங்களான என் ரசிக பெருமக்களுக்கும், தமிழக மக்களுக்கும், என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’.

மேற்கண்ட ரஜினியின் அறிக்கையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பெயர் மிஸ்ஸாகி இருப்பதாக நெட்டிசன்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் முதல்வருக்கு தனியாக நன்றி அறிவிப்பு அறிவித்து ஒரு அறிக்கையை ரஜினிகாந்த் வெளியிடுவார் என்று ரஜினி ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version