சினிமா செய்திகள்

‘Hoote’ செயலியில் நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்!

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று இந்திய திரை உலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நிலையில் அவருக்கு பல்வேறு துறையினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் தன்னை வாழ்த்திய அனைவருக்கும் தனது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் ஆரம்பித்த ‘Hoote’ என்ற செயலியில் குரல் மூலம் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நேற்று தாதா சாகிப் பால்கே விருது கிடைத்ததை அடுத்து இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், தமிழக ஆளுநர் கேஎன் ரவி உள்பட பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இயக்குனர் இமயம் பாரதிராஜா உள்பட பல திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட விளையாட்டு வீரர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதுமட்டுமின்றி கோடான கோடி ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தனது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் ஆரம்பித்த ‘Hoote’ என்ற செயலில் குரல்வழி மூலம் ரஜினிகாந்த் தனது நன்றியை தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது நன்றியை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:

என்னை நெஞ்சார வாழ்த்திய அரசியல் தலைவர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், அனைத்துத் துறை நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும், மக்களுக்கும் என்னுடைய இதயப்பூர்வமான நன்றி.

Trending

Exit mobile version