சினிமா

சர்காருக்கு ஆதரவாக களமிறங்கிய ரஜினிகாந்த்!

Published

on

நடிகர் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் தீபாவளியன்று திரைக்கு வந்தது. அரசியல் கதையை கொண்ட படம் என்பதால் இந்த படம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. சில காட்சிகள் அதிமுக, திமுக கட்சிகளை விமர்சிப்பது போன்று உள்ளது. குறிப்பாக ஆளும் அதிமுகவை கொஞ்சம் அதிகமாகவே இந்த படம் சீண்டியிருக்கிறது.

இதனையடுத்து சர்கார் திரைப்படத்துக்கு பல வழிகளில் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துவிட்டனர் அதிமுகவினர். சர்ச்சைக்குறிய காட்சிகளை நீக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என நேரடியாகவே எச்சரித்தார் அமைச்சர் கடம்பூர் ராஜு. நேற்று இரவு இயக்குநர் முருகதாஸ் வீட்டிற்கு போலீசார் சென்றுள்ளனர். அவர் இல்லாததால் திரும்பி வந்துள்ளனர். மேலும் தியேட்டர்களில் அதிகாரிகள் டிக்கெட் விற்பனையில் முறைகேடு நடந்துள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர்.

இவ்வாறு பல வழிகளில் மறைமுகமாகவும், நேரடியாகவும் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருவதால் சர்ச்சைக்குறிய காட்சிகளை நீக்க படக்குழு சம்மதித்துள்ளதாக தகவல் வருகின்றது. இந்நிலையில் சர்கார் படத்துக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு, அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத்தடுப்பதும், படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version