தமிழ்நாடு

தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவம்: ரஜினிக்கு மீண்டும் சம்மன்!

Published

on

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து ரஜினிகாந்த் கூறிய ஒரு கருத்துக்காக அவரிடம் விசாரணை நடத்த துப்பாக்கி சூடு சம்பவத்தை விசாரணை செய்துவரும் விசாரணை ஆணையம் முடிவு செய்தது.

இதனை அடுத்து அவருக்கு ஏற்கனவே இரண்டு முறை சம்மன் அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து விசாரணை செய்யும் ஆணையத்தின் முன் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் எழுத்துப்பூர்வமாக கேள்வி கேட்டால் அதற்கு தான் பதில் அளிக்க தயார் என்றும் ரஜினிகாந்த் தரப்பில் இருந்து கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மீண்டும் ரஜினிக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது. அந்த சம்மனுக்கும் ரஜினிகாந்த் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ரஜினிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு மூன்றாவது முறையாக விசாரணை ஆணையத்தின் தலைவர் அருணா ஜெகதீசன் அவர்கள் சம்மன் அனுப்பி உள்ள நிலையில் இந்த அம்மனுக்கு அவர் நேரில் ஆஜராவாராவா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கலவரத்தில் ஈடுபட்ட சமூக விரோதிகள் யார் என தனக்கு தெரியும் என்று ரஜினிகாந்த் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version