இந்தியா

மகளின் ‘Hoote’ செயலியை தொடங்கி வைத்தார் ரஜினிகாந்த்: வைரல் புகைப்படம்!

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் ‘Hoote’ என்ற செயலியை ஆரம்பிக்க இருப்பதாக நேற்று ரஜினிகாந்த் அறிவித்திருந்த நிலையில் சற்று முன்னர் இந்த செயலியை அதிகாரபூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த செயலியை சற்றுமுன் தொடங்கி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சௌந்தர்யா ரஜினிகாந்த் உருவாக்கிய ‘Hoote’ என்ற செயலியை சமூகவலைதளங்கள் போன்றது என்றும், ஆனால் அதே நேரத்தில் இது நமது கருத்துக்களை எழுத்துக்களால் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும், குரல்வழி மூலமே சொல்லலாம் என்றும் அதுதான் இந்த செயலின் சிறப்பு என்றும் நேற்றேஎ ரஜினிகாந்த் அவர்கள் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் உருவாக்கிய ‘Hoote’ என்ற செயலியை சற்று முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார். இது ஒரு குரல் வடிவமான சமூக வலைதளம் இன்றும் இந்தியாவில் இருந்து உலகம் முழுவதிலும் உள்ள அனைவரிடமும் குரல் வழியாக எந்த மொழியில் வேண்டுமானாலும் பேசி தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம் என்றும் ரஜினிகாந்த் அந்த ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த செயலியை டவுன்லோட் செய்ய விரும்புவர்களுக்கு ஆன லிங்க்கையும் ரஜினிகாந்த அந்த டுவிட்டரில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version