தமிழ்நாடு

சசிகலா உடல்நலத்தை விசாரித்த ரஜினிகாந்த்: டிடிவி தினகரன் தகவல்

Published

on

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த மாதம் 27 ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலையான நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அதன்பின்னர் குணமாகிய சசிகலா நேற்று காலை பெங்களூரில் இருந்து கிளம்பி இன்று அதிகாலை சென்னை திரும்பினார். அவருக்கு சென்னை வரும் வழியிலும் சென்னையிலும் பிரமாண்டமான வரவேற்பு அமமுக தொண்டர்கள் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் சசிகலாவின் உடல்நிலை குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தொலைபேசி மூலம் விசாரித்து வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் சசிகலா உடல்நிலை குறித்து நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் விசாரித்தார் என டிடிவி தினகரன் சற்றுமுன் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

சசிகலாவிடம் தொலைபேசியில் ரஜினிகாந்த் பேசினாரா என்பது குறித்த தகவல் இல்லை என்றாலும் டிடிவி தினகரனிடம் அவர் சசிகலாவின் உடல்நிலை குறித்து விசாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வரும் சட்டப்பேரவை தேர்தலில் 2 பகுதிகளில் தான் போட்டியிடப் போவதாகவும் ஆர்கேநகர் மற்றும் தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியை தேர்வு செய்திருப்பதாகவும் டிடிவி தினகரன் கூறியுள்ளார். மேலும் சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி உள்ளதாகவும் தினகரன் கூறியுள்ளார்

Trending

Exit mobile version