சினிமா செய்திகள்

’அண்ணாத்த’ படம் குறித்து ‘ஹூட்’ செயலியில் கூறிய ரஜினிகாந்த்!

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ திரைப்படம் கடந்த தீபாவளியன்று வெளியாகி தற்போதும் சூப்பர்ஹிட்டாக திரையரங்குகளில் ஓடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படம் குறித்து தனது மகளின் ஹூட் செயலியில் ரஜினிகாந்த் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவான திரைப்படம் ’அண்ணாத்த’. இந்த படத்திற்கு பல நெகடிவ் விமர்சனங்கள் வந்தாலும் இந்த படம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் ரூபாய் 200 கோடி வசூலை நெருங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் இந்த படம் குறித்து தனது மகளின் ஹூட் செயலியில் குரல் வடிவில் கூறியிருப்பதாவது: ’விஸ்வாசம்’ போல் ஒரு கதை இருந்தால் கூறுங்கள் என இயக்குனர் சிவாவிடம் கூறினேன். அவரும் ’அண்ணாத்த’ கதையை கூறினார். எனக்கு மிகவும் பிடித்தது. அதை அப்படியே எடுக்க வேண்டும் என்றேன். ஆனால் அவர் அதை விட சிறப்பாக எடுத்துள்ளார் என்று கூறினார்

மேலும் இன்னொரு பதிவில் ’வில்லேஜ் கேரக்டர், நல்ல கதை, அது இரண்டும் இரண்டும் போதும் என்று சொன்னார் சிவா. ’அண்ணாத்த’ படத்தோட கதையை சொல்லச் சொல்ல கிளைமாக்ஸ் வரும் போது என் கண்ணை கலங்கிவிட்டது. அப்படியே அவருக்கு கைகொடுத்து இதே மாதிரி படம் எடுங்க என்று சொன்னேன்’ என்று கூறினார். மேலும் ’சார் இந்த படம் வந்ததும் உங்கள் ரசிகர்கள் மட்டுமில்லாமல் எல்லோரும் பார்ப்பார்கள் என்று சொன்னார், அதே மாதிரியே சொல்லி அடித்திருக்கிறார்’ இவ்வாறு ரஜினிகாந்த் ஹூட் செயலியில் தெரிவித்துள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version