சினிமா செய்திகள்

என்னால் கண்ணீரை தடுக்க முடியவில்லை: ‘சமீபத்தில் வெளியான படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்

Published

on

சமீபத்தில் வெளியான திரைப்படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அந்த கடைசி 30 நிமிடத்தில் என்னால் கண்ணீரை தடுக்க முடியவில்லை என பாராட்டு தெரிவித்துள்ளார் .

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டான் திரைப்படம் வெளியானது. இந்த படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் முதல் பாதி முழுக்க முழுக்க கல்லூரியில் ஜாலியான காட்சிகளும் இரண்டாவது பாதி அப்பா சென்டிமென்ட் காட்சிகளும் இருந்தது என்றும் படம் பார்த்தவர்கள் விமர்சனம் செய்தார்கள்.

மேலும் கிட்டதட்ட அனைத்து ஊடகங்களும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்தது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வசூல் சாதனை என்று செய்யும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ஏற்கனவே இந்த திரைப்படத்தை பல திரையுலக பிரபலங்கள் பார்த்து பாராட்டிய நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் இந்த படத்தை பார்த்து பாராட்டி உள்ளார்.

டான் திரைப்படம் சூப்பர் என்றும், அந்த கடைசி 30 நிமிடங்கள் என்னால் கண்ணீரை தடுக்க முடியவில்லை என டான் படத்தை பார்த்து படக்குழுவினரை போனில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். ரஜினிகாந்தின் பாராட்டு படக்குழுவினருக்கு மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending

Exit mobile version