சினிமா செய்திகள்

ரஜினிகாந்த் சென்னை திரும்புவது எப்போது? பரபரப்பு தகவல்!

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்ற நிலையில் அவர் திரும்பும் தேதி குறித்த தகவல் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது உடல்நிலையை பரிசோதனை செய்வதற்காக தனி விமானத்தில் அமெரிக்கா சென்றார். அவருடன் அவருடைய குடும்பத்தினரும் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக மருத்துவ பரிசோதனையை ரஜினிகாந்த் செய்தார் என்பதும் அவர் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த புகைப்படங்களும் ரசிகர்களுடன் உரையாடிய புகைப்படங்களும் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ரஜினிகாந்த் உடல் பரிசோதனை பணிகள் முடிவடைந்து விட்டதால் அவர் விரைவில் சென்னை திரும்புவார் என்று கோலிவுட் வட்டாரங்கள் கடந்த இரண்டு நாட்களாக கூறிவந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ரஜினிகாந்த் நாளை சென்னை திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இன்று ரஜினிகாந்த் அமெரிக்காவில் இருந்து தனி விமானத்தில் கிளம்புவதாகவும் நாளை அதிகாலை அவர் சென்னைக்கு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ரஜினிகாந்த் சென்னை திரும்பியவுடன் ‘அண்ணாத்த’ படத்தின் டப்பிங் பணிகளை மேற்கொள்வார் என்றும் அதன்பிறகு அவர் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version