சினிமா
வீட்டின் முன்பு கூடிய ரசிகர்கள்… அசத்தலாக வாழ்த்து சொன்ன ரஜினி(வீடியோ)…
தீபாவளி, பொங்கல், ரஜினியின் பிறந்த நாள் என பல முக்கிய நாட்களிலும் அவரின் வீட்டின் முன்பு செய்தியாளர்களும், அவரின் ரசிகர்களும் கூடுவது வழக்கமான ஒன்றுதான். சி
றப்பான நாட்கள் மட்டும் என்றில்லை. பொதுவாகவே அவரை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்கிற ஆவலில் ரஜினியின் தீவிர ரசிகர்கள் சிலர் அவரின் வீட்டின் முன்பு காத்து கிடப்பார்கள். ரஜினியும் வந்து அவர்களுக்கு வணக்கம் கூறி, கையசைத்து அவர்களை குஷிப்படுத்துவார்.
இன்றும் அதேபோலவே, காலை முதலே பலரும் போயஸ்கார்டனில் உள்ள அவரின் வீட்டின் முன்பு குவிந்தனர். எனவே, வீட்டை விட்டு வெளியே வந்த ரஜினி அவர்களுக்கு வணக்கம் கூறி கையசைத்து தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்தார். ரசிகர்கள் சிலர் கொடுத்த பொங்கல் பரிசையும் அவர் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Superstar #Rajinikanth's Pongal greetings.#HappyPongal #MakarSankranti pic.twitter.com/mohJWh0WbJ
— Manobala Vijayabalan (@ManobalaV) January 14, 2022