தமிழ்நாடு

ரஜினிகாந்த்-தமிழருவி மணியன் சந்திப்பா? முக்கிய ஆலோசனை நடைபெறும் என தகவல்!

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து உடல் பரிசோதனை முடித்து விட்டு சென்னை திரும்பியுள்ள நிலையில் வரும் 13ஆம் தேதி ரஜினிகாந்த் மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ள இந்த சந்திப்பில் மாவட்ட செயலாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்துவார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் மாவட்ட செயலாளர்களை சந்திப்பதற்கு முன்பே ரஜினிகாந்த் தனிப்பட்ட முறையில் தமிழருவி மணியன் அவர்களை சந்திக்க இருப்பதாகவும் இந்த சந்திப்பின்போது அவர் எதிர்கால நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே அரசியலுக்கு வரவில்லை என்றும் உடல்நிலை காரணத்தால் தான் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியவில்லை என்றும் கூறிய ரஜினிகாந்த், தற்போது மீண்டும் அரசியலுக்கு வருவாரா? அப்படியே அரசியலுக்கு வருவதாக இருந்தாலும் தேர்தல் முடிந்தபின் வந்து என்ன செய்ய? என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் ரஜினியுடன் ஒரு முக்கிய திட்டம் இருப்பதாகவும் அந்த திட்டம் குறித்து தமிழருவிமணியன் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அரசியலுக்கு வராமலேயே மக்களுக்கு சேவை செய்வது குறித்தும் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Trending

Exit mobile version