சினிமா செய்திகள்

சூப்பர் ஸ்டார் கெட்அப்பில் ஹரிஷ் கல்யாண்! அடுத்த படத்தலைப்பு அறிவிப்பு!

Published

on

நடிகர் ஹரிஷ் கல்யாணின் அடுத்த படத்தின் தலைப்பு இன்று மதியம் 12.12 மணிக்கு அறிவிக்கப்பட்டது.

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளான இன்று டிசம்பர் 12 ஆம் தேதி ஒரு சர்ப்ரைஸ் இருப்பதாகவும், மதியம் 12.12 மணிக்கு அது அறிவிக்கப்படும் என்றும் நடிகர் ஹரிஷ் கல்யாண் டுவிட் செய்திருந்தார். அது அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எதிர்பார்த்தபடியே ஹரிஷ் கல்யாணின் அடுத்த படத்தின் தலைப்பையும், ஃபர்ஸ்ட் லூக் போஸ்டரும் டுவிட்டரில் வெளியிடப்பட்டது. ஆனால் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெறித்தனமாக இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

படத்தின் தலைப்பு ‘ஸ்டார்’. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் பழைய ரஜினிகாந்தின் ஹேர்ஸ்டைலோடு ஹரிஷ் கல்யாண் உள்ளார். அண்ணாமலை, பாட்ஷா இரண்டு திரைப்படங்களையும் கலந்தாற் போல், ஹரிஷ் கல்யாணின் தோற்றம் உள்ளது. இந்த ‘ஸ்டார்’ படத்திற்கு இளன் இயக்குநராகவும், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளராகவும் உள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version