சினிமா செய்திகள்

நெல்சனுக்கு பதில் கார்த்திக் சுப்புராஜ்? ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு!

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ’தலைவர் 169’ திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த படத்தில் இருந்து நெல்சன் நீக்கப்பட்டு கார்த்திக் சுப்புராஜ் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் மிகப்பெரிய நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றதை அடுத்து ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் நடிக்க யோசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டு நெல்சனுகு பதிலாக கார்த்திக் சுப்புராஜை இயக்குநராக நியமனம் செய்ய ரஜினிகாந்த் கூறியதாக செய்தி பரவுகிரது.

ஏற்கனவே இதே கூட்டணியில் உருவான பேட்ட திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் அந்த திரைப்படத்தால் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய லாபம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் ரஜினியின் ரசிகராக கார்த்திக் சுப்புராஜ் ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி இருந்த நிலையில் அதே போன்று மீண்டும் ஒரு திரைப்படம் உருவாக வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமன்றி அனேகமாக இந்த படம் ’பேட்ட 2’ படமாகவும் இருக்கலாம் என்றும் கூறப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version