சினிமா

ஆஸ்கர் விருது வென்ற ஆர்ஆர்ஆர்.. ரஜினிகாந்த், கமல், சூர்யா வாழ்த்து.. மத்தவங்களுக்கு என்ன ஆச்சு?

Published

on

95வது ஆஸ்கர் விருது விழாவில் சரித்திர சாதனை படைத்துள்ளது இந்திய சினிமா என்றால் அது மிகையாகாது. கடைசியாக அமீர்கானின்  லகான் திரைப்படம் இந்தியா சார்பில் ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பெற்றது. ஆனால், அதன் பிறகு எந்தவொரு இந்திய படங்களும் ஆஸ்கர் நாமினேஷனில் கூட இடம்பிடிக்காத நிலையில், இந்த ஆண்டு ஆஸ்கர் விருது விழாவில் எலிபென்ட் தி விஸ்பரர்ஸ் மற்றும் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது வென்றன.

இந்நிலையில், ஆஸ்கர் விருது வென்ற எம்.எம். கீரவாணி, ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கிய இயக்குநர் ராஜமெளலி, எலிபென்ட் தி விஸ்பரர்ஸ் படத்தை இயக்கிய குனித் மோங்காவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலையிலேயே வாழ்த்து தெரிவித்தார்.

#image_title

ரஜினிகாந்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவும் ஆஸ்கர் விருதுகளை வென்ற இந்தியர்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெகுவாக பாராட்டினார்.

#image_title

தற்போது உலக நாயகன் கமல்ஹாசன், தனது ட்விட்டர் பக்கத்தில், நாட்டையே ஆட வைத்த பாடலுக்கு உலகளாவிய உச்சபட்ச அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. ஓர் இந்தியனாகவும், சக கலைஞனாகவும் உங்கள் சாதனையை நினைத்து பெருமிதம் அடைகிறேன். mmkeeravaani க்கும் ssrajamouli -க்கும் RRRMovie அணியினருக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.

#image_title

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்த நிலையில், இதுக்கு கூட அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் எந்தவொரு வாழ்த்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருப்பது ஏன்? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version