தமிழ்நாடு

அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? என ஆலோசிக்கவுள்ளேன்: ரஜினிகாந்த் பேட்டி

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்க இருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியானது என்பதும், நேற்று தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட செயலாளர்களும் சென்னைக்கு கிளம்பி இன்று அதிகாலை வந்து விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்று காலை 10 மணிக்கு சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் 38 மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த ஆலோசனை செய்ய உள்ளார். இந்த ஆலோசனைக்காக ராகவேந்திரா மண்டபத்திற்கு வந்த ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? என மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசித்து உள்ளேன். எதிர்காலத்தில் நான் அரசியலுக்கு வருவேனா என ரசிகர்களிடம் கேள்வி உள்ளதால் அது பற்றி ஆலோசனை செய்ய உள்ளேன்’ என்று கூறினார். மேலும் ரஜினி மக்கள் மன்றத்தை தொடரலாமா? அதன் செயல்பாடுகள் என்ன? என்பது குறித்து ஆலோசிக்க உள்ளேன்’ என்று ரஜினிகாந்த் கூறினார்.

தமிழகத்தில் தற்போது தான் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்து உள்ளது என்பதும் இன்னும் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு 5 ஆண்டுகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை அதில் போட்டியிடுவதில் ரஜினிகாந்துக்கு விருப்பமில்லை என்பதை கடந்த பாராளுமன்ற தேர்தலின் போதே தெரிந்து விட்டது.

எனவே இன்னும் 5 ஆண்டுகாலம் தேர்தலுக்கு உள்ள நிலையில் தற்போது அரசியல் குறித்த ஆலோசனை செய்வது ரஜினிகாந்த் சரிதானா? என்ற கேள்வி அரசியல் விமர்சகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version