தமிழ்நாடு
மக்கள் சேவை கட்சி.. ஆட்டோ சின்னம்.. பாட்ஷா போல வெற்றி பெறுவாரா? ரஜினிகாந்த்!
நடிகர் ரஜினிகாந்த் தொடங்க இருக்கும் கட்சியின் பெயர் மக்கள் சேவை கட்சி என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
கட்சியின் சின்னமாகப் பாபா முத்திரையைக் கேட்டுள்ளனர். ஆனால் தேர்தல் ஆணையம் ஆட்டோ சின்னத்தை ஒதுக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அரசியல் கட்சி தொடங்குவது உறுதி என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள ரஜினிகாந்த், டிசம்பர் 31-ம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார். ஜனவரி மாதம் முதல் கட்சியைத் தொடங்குகிறார்.
2021-ம் ஆண்டு சட்ட மன்றத் தேர்தலில் ரஜினிகாந்த்தின் மக்கள் சேவை கட்சி முதல் முறையாகத் தேர்தலில் போட்டியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
பாட்ஷா படத்தில் ஆட்டோ ஓட்டுநராக ரஜினிகாந்த் பெற்ற வெற்றியைப் பெறுவாரா? உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்.
Reports: Superstar Rajinikanth’s party name is #MakkalSevaiKatchi Requested Baba Mudra but EC alloted Auto rickshaw. Will he repeat the #Baasha magic in politics? pic.twitter.com/2i2FPdufzL
— Rajasekar (@sekartweets) December 15, 2020