சினிமா செய்திகள்

தலைவா வெளியே வா.. கண்ணீர் விட்டு அழுத பெண்!

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 70வது பிறந்த நாள் அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

பொதுவாகத் தனது பிறந்தநாளின் போது தனது ரசிகர்களைச் சந்தித்து புகைப்படத்தை எடுத்துக்கொள்வார் ரஜினிகாந்த்.

இது கோவிட்-19 காலம் என்பதால் அவரது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு ரசிகர்களை ரஜினிகாந்த் சந்திக்கவில்லை. மேலும் அவர் தனது போயஸ் கார்டன் வீட்டில் இல்லை என்றும் நேற்றே வெளியில் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் ரஜினிகாந்த்தை பார்த்துவிட்டு தான் போவோம் என்று ரசிகர்கள் அவரது வீட்டின் முன்பு குவிந்துள்ளனர். ரஜினி வீட்டின் முன்பு நின்றுகொண்டு இருக்கும் அவரது ரசிகை ஒருவர், சூப்பர் ஸ்டார் ஜே, வாங்க சார். உங்களை பார்க்கனும் என்று ரொம்ப நாள் ஆசை சார் எனக்கு. விட மாட்டேன் என்கிறார்கள் என்று கண்ணீர் விட்டு அழுகிறார். அவருடன் கூட வந்துள்ள சிறுவர்களும் ரஜினிகாந்த் அங்கிள் வெளியே வாங்க. உங்களை பார்க்க வேண்டும் என்று கோஷமிட்டு வருகின்றனர்.

ரஜினிகாந்த் வீட்டில் இல்லை என்று தெரிந்த் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Trending

Exit mobile version