தமிழ்நாடு

ரஜினிகாந்த் இன்று மாலை டிஸ்சார்ஜ்?

Published

on

அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அண்ணாத்த படப்பிடிப்பின் போது உடல்நலக்குறைவால் நடிகர் ரஜினிகாந்த் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், தற்போது அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ரஜினிகாந்தின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தாலும், அது கட்டுக்குள் இருக்கிறது. இரத்த அழுத்தம் மற்றும் அவரது உடல்நிலையை கண்காணிக்க பிரத்யேகமாக மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது.  இன்று மாலை ரஜினி டிஸ்சார்ஜ் குறித்து முடிவு செய்யப்படும்’ இவ்வாறு அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

ரஜினியின் இரத்த அழுத்தம் நேற்றை விட இன்று சீராக உள்ளது. அதிகப்படியான மனஅழுத்தம் காரணமாகவே இரத்த அழுத்த மாறுபாடு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில், இன்று இரவு அல்லது நாளை மாலை அவர் டிஸ்சார்ஜ் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version