சினிமா செய்திகள்
ரஜினி தர்பார் அமைக்க சுபமுகூர்த்த தினமான நேற்று போட்டாச்சு பூஜை!
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் முதன்முறையாக நடித்து வரும் படத்திற்கு தர்பார் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு செவ்வாய்க்கிழமை வெளியான நிலையில், சுபமுகூர்த்த தினமான புதன்கிழமை பூஜை போடப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர். முருகதாஸுக்கு பரிவட்டம் கட்டி பட பூஜை நடைபெற்றது. வழக்கம் போல, இந்த பட பூஜைக்கு லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா கலந்து கொள்ளவில்லை. தளபதி 63 படத்தில் படு பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் லைகா சுபாஸ்கரன், சர்கார் படத்தின் ஸ்டன்ட் இரட்டையர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டு பொங்கலுக்கு பேட்ட வெளியாகி ஹிட் கொடுத்ததைப் போல அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தர்பார் ரிலீஸ் செய்யப்படும் என படக்குழுவினர் இப்போதே அறிவித்துள்ளனர்.