சினிமா செய்திகள்

ஆட்டை வெட்டி ’அண்ணாத்த’ போஸ்டரில் ரத்தம்: ரஜினிகாந்த் கண்டன அறிக்கை!

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மீது ஆட்டை வெட்டி ரத்தம் தெளித்த ரஜினி ரசிகர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்து ரஜினிகாந்த் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப் பிறந்தநாளின்போது உயிருள்ள ஆட்டை வெட்டி அதன் ரத்தத்தை பேனரில் தெளித்தனர். இது குறித்த வீடியோ வைரல் ஆன நிலையில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது

இந்த நிலையில் இதே போன்ற சம்பவம் தமிழகத்திலும் நடந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த போஸ்டர் மீது உயிருள்ள ஆட்டை வெட்டி அதில் இருந்து பீறிட்டு வரும் ரத்தத்தை போஸ்டரில் தெளித்து தெளித்துனர்.

இது குறித்த வீடியோ வைரல் ஆன நிலையில் இந்த வீடியோவுக்கு கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. மேலும் இது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இது போன்ற ரசிகர்களின் செயலை ஆதரிக்கக் கூடாது என்றும் கடுமையான கண்டனம் தெரிவித்து ரசிகர்களை எச்சரிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன. இந்த நிலையில் இதுகுறித்து அகில இந்திய ரஜினிகாந்த் தலைமை ரசிகர் மன்றத்தின் சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

’அண்ணாத்த’ திரைப்படம் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மீது ஒரு சிலர் ஆடு வெட்டி ரத்த அபிஷேகம் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது மட்டுமின்றி மிகவும் வருந்தத்தக்கது. அருவருப்பான இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version