சினிமா செய்திகள்

ரஜினியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் யார் யார் கலந்து கொண்டார்கள்: வைரல் புகைப்படங்கள்

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார் என்பதும் அவருக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதலமைச்சர் முக ஸ்டாலின், கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன்சிங் மற்றும் கமல்ஹாசன் உள்பட திரையுலகினர் பலர் வாழ்த்து தெரிவித்தனர் என்பதை பார்த்தோம்

இந்த நிலையில் ரஜினிகாந்த் நேற்று தனது வீட்டில் பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படங்கள் சற்றுமுன் வெளியாகியுள்ளன. ரஜினிகாந்த், அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த், மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா, பேரன்கள் மற்றும் ரஜினியின் சகோதரர் சத்தியநாராயணா மற்றும் உறவினர்கள் இந்த புகைப்படத்தில் உள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

 

Trending

Exit mobile version