சினிமா செய்திகள்

உங்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது: ரைட்டர் இயக்குனரை பாராட்டிய ரஜினிகாந்த்

Published

on

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் பிராங்கிளின் ஜேக்கப் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ரைட்டர் என்ற திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பாராட்டியுள்ளார்.

சமுத்திரகனி நடிப்பில் உருவான ரைட்டர் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் ஊடகங்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தை ஏற்கனவே பல திரையுலக பிரபலங்கள் பார்த்து சமூக வலைதளங்களில் பாராட்டிய நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் இந்த படத்தை பார்த்துள்ளார்.

ரைட்டர் படம் சூப்பராக இருப்பதாகவும் சமுத்திரக்கனி மிக அருமையாக நடித்து இருப்பதாகவும் இயக்குனர் பிராங்க்ளின் ஜேக்கப்பிற்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்றும் ரைட்டர் படக்குழுவினருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் சமுத்திரகனிக்கு தொலைபேசி மூலம் அவர் தனி பாராட்டு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சமுத்திரக்கனி தனது நன்றியை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பாராட்டு காரணமாக ரைட்டர் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version