சினிமா செய்திகள்

தலைவர் பிறந்தநாளில் ‘அண்ணாத்த’ பட அப்டேட்!

Published

on

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளான இன்று,  அவருடைய ‘அண்ணாத்த’ படம் குறித்து இயக்குநர் சிவா புதிய அப்டேட் வழங்கியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி்காந்தின் அடுத்த திரைப்படம் ‘அண்ணாத்த’. இது அவருடைய 168 ஆவது திரைப்படம். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கவுள்ளார்.

இந்த நிலையில், ரஜினிகாந்தின் பிறந்தநாளான இன்று அண்ணாத்த படக்குழுவினர் சார்பில் சிறுத்தை சிவா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் ரஜினிகாந்திற்கு படக்குழுவினர் சார்பில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். பின்னர், அண்ணாத்த திரைப்படம் குறித்து பேசிய அவர், வரும் டிசம்பர் 15 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கவுள்ளதாக தெரிவித்தார்

ஏற்கெனவே ரஜினியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிஸியாக இருக்கும் அவரது ரசிகர்கள், அண்ணாத்த படத்தின் அப்டேட் ஒரு ஸ்பெஷல் ட்ரீட்டாக அமைந்துள்ளது.

Trending

Exit mobile version