சினிமா செய்திகள்

ரஜினிக்கு மகனாக நடிக்கின்றாரா சிவகார்த்திகேயன்: ‘தலைவர் 169’ படத்தின் புதிய அப்டேட்!

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான தலைவர் 169 படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளை நெல்சன் குழுவினர் செய்து வரும் நிலையில் இந்த படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நெல்சன் படம் என்றாலே அதில் சிவகார்த்திகேயன் கண்டிப்பாக ஒரு பாடல் எழுதுவார் என்று கூறப்படும் நிலையில் இந்த படத்தில் பாடல் எழுதுவது மட்டுமின்றி ஒரு முக்கிய கேரக்டரில் அவர் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக ரஜினியின் மகனாக சிவகார்த்திகேயன் கௌரவ வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் அவருடைய கேரக்டர் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் .

முதல் முறையாக ரஜினியின் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பது இரு தரப்பு ரசிகர்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version