சினிமா செய்திகள்
தனுஷை திரையுலகில் இருந்து விரட்ட ரஜினிகாந்த் தரப்பு முயற்சியா? அதிர்ச்சி தகவல்
தனுஷை திரையுலகில் இருந்து விரட்ட ரஜினிகாந்த் தரப்பு முயற்சி செய்து வருவதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் மிக வேகமாக ஒரு வதந்தி பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்ட தனுஷ் 18 ஆண்டுகளுக்குப் பின்னர் திடீரென அவரை பிரிவதாக அறிவித்திருந்தார். தனுஷ் ஐஸ்வர்யா திருமணத்தில் ரஜினிகாந்துக்கு சம்மதம் இல்லை என்றாலும் இருவரும் காதலித்து விட்டதால் வேறு வழி இன்று அவர் திருமணத்திற்கு ஒப்புதல் கொடுத்தார்.
இருப்பினும் திருமணத்திற்குப் பின்னர் தனுஷை ரஜினி மருமகன் போல் நினைக்காமல் மகன் போலவே நினைத்து வந்தார். இந்த நிலையில் ஐஸ்வர்யாவை திடீரென பிரிய தனுஷ் முடிவு செய்துள்ளதால் ரஜினி தரப்பு ஆத்திரம் அடைந்து விட்டதாகவும் அதனால் தனுஷை திரையுலகில் இருந்து விரட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
தனுஷை வைத்து இனி எந்த தயாரிப்பாளரும் படம் தயாரிக்க மாட்டார்கள் என்றும் அதற்கான பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அதே நேரத்தில் ரஜினிகாந்த் தனக்கு துரோகம் செய்தவர்களை மன்னித்து அவர்களுக்கு நன்மை செய்யக் கூடியவர் என்றும் அவர் கண்டிப்பாக தனுஷின் திரை வாழ்க்கையில் எந்தவிதமான கெடுதலும் செய்ய மாட்டார் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.
இருப்பினும் ரஜினிகாந்தை பகைத்துக்கொண்டு தனுஷ் திரையுலகில் நீடிக்க முடியுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என திரையுலகினர் கூறி வருகின்றனர்.