தமிழ்நாடு

கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்களை நியமிக்கும் போது பணம் வாங்கக்கூடாது.. ரஜினி கடும் எச்சரிக்கை

Published

on

நடிகர் ரஜினிகாந்த் புதிதாக கட்சி தொடங்கியுள்ளார். புதிய கட்சியின் விவரங்கள் மற்றும் அரசியல் திட்டங்களை வரும் டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் மன்றத்தை விரிவுபடுத்துவதற்கு முழுவீச்சில் களம் இறங்குமாறு நிர்வாகிகளிடம் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், தற்போது ரஜினிகாந்த் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். குறிப்பாக பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமிக்க வேண்டும், ஒவ்வொரு மாவட்ட பூத்களிலும் குறைந்தது 15 பேர் நியமிக்க வேண்டும். உறுப்பினர்களை நியமிக்கும் போது அவர்களிடம் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றை பெற வேண்டும்.

மேலும், அவ்வாறு பூத் கமிட்டி உறுப்பினர்களிடம் எந்தவித பணமும் வசூலிக்க கூடாது. ஊழலே ஒழிப்பதற்காகவே நாம் வந்துள்ளோம். எனவே, உறுப்பினர்களிடமும் பணம் பெற கூடாது, வாக்கிற்காக மக்களிடமும் பணம் கொடுக்கக் கூடாது என்று ரஜினி தரப்பில் மன்ற நிர்வாககிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version