சினிமா செய்திகள்

நண்பர் விவேக் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்: ரஜினிகாந்த் டுவிட்

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகிய விவேக் இன்று காலை திடீரென மாரடைப்பு காரணமாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவருக்கு ஆஞ்சியோகிராம், எக்மோ உள்ளிட்ட கருவிகளின் உதவியால் சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் இன்று மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இதனால் கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இந்த நிலையில் நடிகர் விவேக் விரைவில் குணமாக வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ், திமுக தலைவர் ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மற்றும் திரையுலகினர் பலர் தங்களது சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

அந்த வகையில் சற்று முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் நண்பர் விவேக் அவர்கள் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். விவேக் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் ’சிவாஜி’ என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பதும் அந்த படம் மிகப்பெரிய வெற்றி என்பதும் தெரிந்ததே.

Trending

Exit mobile version