சினிமா செய்திகள்
கமல்ஹாசனிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த்!
உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரிடம் ரஜினிகாந்த் நலம் விசாரித்து தகவல் வெளிவந்துள்ளது.
உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் சமீபத்தில் தான் தொடங்கிய கதர் நிறுவனத்தின் புரமோஷனுக்காக அமெரிக்கா சென்று இருந்தார் என்பதும் அங்கிருந்து அவர் இந்தியா திரும்பியவுடன் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக உறுதி செய்யப்பட்டது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கமல்ஹாசன் விரைவில் குணமடைய வேண்டுமென முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்பட பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்கள் மற்றும் கமல்ஹாசனின் ரசிகர்களும் அவர் விரைவில் குணமாக வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ரஜினிகாந்த் சற்று முன்னர் தொலைபேசி மூலம் கமல்ஹாசனை தொடர்பு கொண்டு அவர் விரைவில் குணமாக வேண்டுமென்று வாழ்த்து தெரிவித்ததாக தகவல் வெளிவந்துள்ளது.