சினிமா செய்திகள்

புத்தாண்டு வாழ்த்து சொல்லி சூப்பர் ஸ்டார் ரஜினி வெளியிட்ட வீடியோ #Viral

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சில நாட்களுக்கு முன்னர் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் புத்தாண்டு வாழ்த்து சொல்லும் புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

ஐதராபாத்தில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த ரஜினிகாந்தின், உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் அங்கிருக்கும் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்து வந்தார். சில நாட்களுக்கு முன்னர் டிஸ்சார்ஜ் ஆன ரஜினி, சென்னையில் உள்ள தனது போயஸ் தோட்ட இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். அடுத்த சில நாட்களுக்கு ரஜினி, பூரண உடல் நலம் பெற முழு ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அரசியல் கட்சி அறிவிப்பை கைவிட்டார். இதற்கு தொடர்ச்சியாக எதிர்ப்பும் ஆதரவும் வந்து கொண்டிருக்கும் நிலையில், அவரின் வீடியோ ஒன்று ரிலீஸாகியுள்ளது.

அந்த வீடியோவில் ஆங்கிலத்தில் பேசும் ரஜினி, அப்போலோ மருத்துவமனைக்குப் புகழாரம் சூட்டும் வகையில் பேசியுள்ளார். ‘அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். நான் மன நிம்மதியுடன், நல்ல ஆரோக்கியத்தோடு இந்த மருத்துவமனையிலிருந்து விடைபெறுகிறேன். இந்த மருத்துவமனையின் சுத்தம், பணி செய்யும் ஊழியர்கள் என எல்லாம் சிறப்பாக உள்ளது. கீப் இட் அப்’ என்று பாராட்டுகிறார் ரஜினி. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

Trending

Exit mobile version