சினிமா

ரஜினியுடன் மோதிய விஜய்சேதுபதி.. பேட்ட சூட்டிங்கில் பரபரப்பு!

Published

on

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் உடன் நடிகர் விஜய்சேதுபதி பேட்ட படத்திற்காக சண்டையிடும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

இளம் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ”பேட்ட” படத்தில் நடிக்க ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படத்தை நீண்ட நாட்களுக்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இதற்காக ரஜினி டார்ஜிலிங், மும்பை, சென்னை ஆகிய இடங்களில் சூட்டிங்கில் கலந்து கொண்டார். விஜய்சேதுபதி, நவாஸுதீன் சித்திகி, சிம்ரன், திரிஷா, பாபி சிம்ஹா, சனத் ரெட்டி, மேகா ஆகாஷ் ஆகிய முக்கியமான நபர்கள் நடிக்கிறார்கள்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் உடன் நடிகர் விஜய்சேதுபதி பேட்ட படத்திற்காக சண்டையிடும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இது லக்னோவில் படமாக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version