சினிமா

ரஜினி டிவி; அரசியலுக்கு ஆயத்தமாகும் ரஜினி!

Published

on

அரசியல் கட்சியை விரைவில் துவங்கவுள்ள நடிகர் ரஜினி அதற்கு முன்னதாக ரஜினி டிவி என்ற தொலைக்காட்சியை துவங்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், அந்த புதிய சேனலுக்கு ரஜினி டிவி, சூப்பர்ஸ்டார் டிவி அல்லது தலைவர் டிவி என்கிற பெயரில் சேனலை ஆரம்பிக்க தடையில்லா சான்று கோரி ரஜினி மக்கள் மன்றம் சார்பாக லெட்டர் பேடு ஒன்றும் இணையத்தில் உலாவி வருகின்றது.

மேலும், சமீபத்தில் தந்தி டிவியின் தலைமை பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்த ரங்கராஜ் பாண்டேவை ரஜினி டிவியின் தலைமை பொறுப்பில் அமர்த்தும் திட்டமும் உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Trending

Exit mobile version