தமிழ்நாடு

ரஜினி பெயரில் வருகிறது புதிய டிவி சேனல்!

Published

on

அரசியலுக்கு வர உள்ளதாக அறிவித்து இதுவரை கட்சி ஆரம்பிக்காமல் இழுத்தடித்து வரும் நடிகர் ரஜினிகாந்தின் பெயரில் டிவி சேனல் ஒன்று விரைவில் தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடவுள்ளதாக கடந்த வருடம் டிசம்பர் 31-ஆம் தேதி அறிவித்த நடிகர் ரஜினிகாந்த் இதுவரை கட்சி ஆரம்பிக்காமல் தனது ரஜினி மக்கள் மன்றத்தை தமிழகம் முழுவதும் நிர்வாகிகளை நியமித்து பலப்படுத்தி வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அவரது பிறந்த நாளின் போது கட்சி அறிவிப்பு இருக்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் வழக்கம் போல அவர்களுக்கு ஏமாற்றமே.

இந்நிலையில் தனது பெயரில் தொலைக்காட்சி தொடங்குவதற்கு ஆட்சேபம் இல்லை என்று ரஜினிகாந்த் வணிக இலச்சினை பதிவு மையத்தின் பதிவாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். தொலைக்காட்சி ஆரம்பிப்பதற்காக சென்னை அண்ணா சாலையைச்சேர்ந்த வி.எம்.சுதாகர் என்பவரின் பெயரில் சூப்பர் ஸ்டார் டிவி, தலைவர் டிவி, ரஜினி டிவி ஆகிய பெயர்களை சொல்யூபில்ஸ் கார்ப்பரேட் நிறுவனத்தின் வர்த்தக முத்திரை வழக்கறிஞர் C.பிரகாஷ் பதிவு செய்திருக்கிறார்.

அந்த சேனலில் தனது பெயர் மற்றும் புகைப்படத்தை லோகோவிலும், லேபிளிலும் பயன்படுத்துவதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. இந்த விண்ணப்பத்தை அடுத்த கட்டத்துக்குப் பரிசீலிக்கலாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் என ரஜினி கடிதம் ஒன்று எழுதியுள்ளார். ஆனால் இந்தக் கடிதம் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. தேதி மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தின் சீல் இல்லாமல் இந்த கடிதம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version