சினிமா

வாவ்.. ரஜினியின் புதிய லுக் இதுதான்.. புகைப்படம் வெளியிட்ட திரிஷா

Published

on

டேராடூன்: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ள திரிஷா அந்த படம் பற்றிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படத்தை நீண்ட நாட்களுக்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இதற்காக ரஜினி டேராடூன் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் புறப்பட்டு சென்று ஷூட்டிங்கில் கலந்து கொண்டார். பல மாநிலங்களில் இதற்கான படிப்பிடிப்பு நடந்து வருகிறது.

ரஜினியின் புதிய லுக் இதுதான்

ரஜினியுடன் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் பாபி சிம்ஹா, சனத் ரெட்டி, மேகா ஆகாஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

திரிஷா முதல்முறையாக ரஜினியுடன் நடிக்கிறார். திரிஷா இதுகுறித்து முதல்முறையாக புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதில் ரஜினி தாடி வைத்து இளமையான தோற்றத்தில் உள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version